Google Chrome OS
Microsoft மற்றும் Google இடையாலான போட்டி சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அண்மையில்தான் Google இற்குப் போட்டியாக Microsoft தனது புதிய தேடுபொறியான bing இனை களத்தில் இறக்கியது. சும்மா இருக்காத Google, Microsoft இனது இயங்குதளத்திற்குப் போட்டியாக தனது புதிய இயங்குதளமான Google Chrome OS இனை அறிவித்தது. அந்த சூடு தணியுமுன்பாகவே Microsoft அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது Google இன் Docs இற்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது Microsoft office இன் அடுத்த பதிப்பான Microsoft office 2010 இல் ஆன்லைனில் பயன்படுத்தும் வசதியையும் வளங்குகின்றது. இந்த Web based applications அவற்றின் ஆன்லைன் தன்மையால் install செய்ய எடுக்கும் இடமும் குறைவாகவே இருக்கும். மேலும் அவற்றை இணையத்தில் Save செய்யவும், உருவாக்கிப் பயன்படுத்தவும், அடுத்தவருடன் பகிரவும் இலகுவாக இருக்கும். Google இன் Docs இல் இப்போதிருக்கும் வசதிகளை விட இது அதிகளவான வசதிகளைக் கொண்டிருக்கும்.
இந்த வசதியை இலவசமாகவே Microsoft வளங்கவிருக்கிறது. அதற்குத் தேவையானது ஒரு Windows live கணக்கு மாத்திரமே. அது இல்லாதவர்கள் இலவசமாக உருவாக்கிக்கொள்ளவும் முடியும். இந்த Microsoft office 2010 இன்னும் சில மாதங்களிலேயே பாவனைக்கு வரவிருக்கிறது.
இதுவரை நாளும் இணையத்தில் ஜாம்பவானாகத் திகழ்ந்த google இற்கும், மென்பொருட் துறையில் பிஸ்தாவான Microsoft உம் மோதிக்கொள்வது அடுத்த தலைமுறைக்கான கணினித்துறையின் வளற்சிநான் ஆரம்பம் எனக் கொள்ளலாம். எது எப்படியோ, ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பதுபோல, இனி நம்ம காட்டில மழைதான்