முதற்கனவே முதற்கனவே (மஜ்னு) mudhaRkanavE muthaRkanavE (MAJNU)


படம்: மஜ்னு
இசை: ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பாம்பே ஜெயசிறி, ஹரீஸ் ராகவேந்ரா


முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா
முதற் கனவு முதற் கனவு மூச்சுள்ளவரையிலும் வருமல்லவா
கனவுகள் தீர்ந்துபோனால் வாழ்வில்லை அல்லவா
கனவல்லவே கனவல்லவே கண்மணி நாமும் நிஜமல்லவா
சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா
முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா

எங்கே எங்கே......... நீ எங்கே என்று
காடு மேடு தேடி ஓடி இரு விழி தொலைத்துவிட்டேன்
இங்கே இங்கே நீ வருவாயென்று
சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர்வளர்த்தேன்
தொலைந்த என் கண்களை பாத்ததும் கொடுத்து விட்டாய்
கண்களை கொடுத்து இதயத்தை எடுத்துவிட்டாய்
இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன்வந்தாய்
நீ மறுபடி ஏன் வந்தாய்
விழித்தெழுந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா
விழி திறக்கையில் கனவென்னை துறத்துது நிஜமா நிஜமா

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... ......
ஊடல் வேண்டாம் ஓடல்கள் வேண்டாம்
ஓசையோடு நாதம் போல உயிரினில் உயிரினில் கலந்துவிடு
கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல மடியினில் மடியினில் உறங்கிவிடு
நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை
நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை
வண்ண போக்கள் வேர்க்குமுன்னே வரச்சொல்லு தென்றலை
வரச்சொல்லு தென்றலை.........
தாமரையே தாமரையே நீரினில் ஒளியாதே
நீ நீரில் ஒளியாதே
தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன்
அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்
சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய்
மரம் கொத்தியே மரம் கொத்தியே மனதை கொத்தி துளையிடுவாய்
குளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்...........தூங்கும் காதல் எழுப்புவாய்
நீ தூங்கும் காதல் எழுப்புவாய்...
தூங்கும் காதல் எழுப்புவாய்.



MOVIE : MAJNU
MUSIC : HARRIS JEYARAJ
SINGERS : BOMBAY JEYASHRI & HARISH RAGAVENDRA


mudhaRkanavE muthaRkanavE maRubadi Envanthaay
-nii maRubadi En vanthaay
vizhiththezhunthathum maRubadi kanavugaL varumaa varumaa
vizhi thiRakkaiyil kanavennai thuRaththuthu nijamaa nijamaa
muthaR kanavu muthaR kanavu muuchchuLLavaraiyilum varumallavaa
kanavugaL thiirnthupOnaal vaazhvillai allavaa
kanavallavE kanavallavE kaNmaNi naamum nijamallavaa
saththiyaththil muLaiththa kaadhal saagaathu allavaa
mudhaRkanavE muthaRkanavE maRubadi Envanthaay
-nii maRubadi En vanthaay
vizhiththezhunthathum maRubadi kanavugaL varumaa varumaa
vizhi thiRakkaiyil kanavennai thuRaththuthu nijamaa nijamaa

enggE enggE......... nii enggE enRu
kaadu mEdu thEdi Odi iru vizhi tholaiththuvittEn
inggE inggE nii varuvaayenRu
sinna kaNgaL sinthuginRa thuLigaLil thuLigaLil uyirvaLarththEn
tholaintha en kaNgaLai paaththathum koduththu vittaay
kaNgaLai koduththu idhayaththai eduththuvittaay
idhayaththai paRiththathaRkaa en jiivan edukkiRaay

mudhaRkanavE muthaRkanavE maRubadi Envanthaay
-nii maRubadi En vanthaay
vizhiththezhunthathum maRubadi kanavugaL varumaa varumaa
vizhi thiRakkaiyil kanavennai thuRaththuthu nijamaa nijamaa

mmmmmmmmmm.... ......
uudal vENdaam OdalgaL vENdaam
OsaiyOdu naadham pOla uyirinil uyirinil kalanththuvidu
kaNNiir vENdaam kaayanggaL vENdaam
aaRu maadha piLLai pOla madiyinil madiyinil uRanggividu
-nilaa varum nEram natchaththiram thEvai illai
-nii vantha nEram nenjchil oru uudal illai
vaNNa pookkaL vErkkumunnE varachchollu thenRalai
varachchollu thenRalai.........
thaamaraiyE thaamaraiyE niirinil oLiyaathE
-nii niiril oLiyaathE
dhinam dhinam oru suuriyan pOla varuvEn varuvEn
anudhinam unnai aayiram kaiyaal thoduvEn thoduvEn
suuriyanE suuriyanE thaamarai mugavari thEvai illai
viNNil niiyum irunthu koNdE viral niitti thiRakkiRaay
maram koththiyE maram koththiyE manathai koththi thuLaiyiduvaay
kuLaththukkuL viLakkadiththu thuunggum kaadhal ezhuppuvaay
thuunggum kaadhal ezhuppuvaay...........thuunggum kaadhal ezhuppuvaay
-nii thuunggum kaadhal ezhuppuvaay...
thuunggum kaadhal ezhuppuvaay.
Powered by Blogger.