அவுஸ்திரேலியாவில் மீன் மழை (வீடியோ)

நாம் எல்லோரும் அடைமழை ,கனமழை,பனிமழை என பல வகை மழைகளை கண்டு இருக்கிறோம் .ஆனால் கடந்த இரு நாட்களாக ஆஸ்திரேலியாவில் பெய்த மழை சற்று விசித்திரமானது..மீன் மழை பெய்திருக்கிறது லஜமானு (lajamanu )என அழைக்கப்படும் ஒரு சிறு நகரத்திலே இந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது .ஆஸ்திரேலியாவின் திரினாத் மாகாணத்தில் இருந்து நாநூறு மைல் தூரம் தள்ளி இருக்கும் இந்த நகரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது .எனினும் கடந்த இரண்டு நாட்களாகவே இந்த விசித்திர சம்பவம் நிகந்துள்ளது .

660 குடும்பங்களே வசித்து வரும் இந்த நகரில் மக்கள் கூடையுடன் மீன்களை பிடிக்க அலைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .மழை போல் சிறிய அளவான வெள்ளை நிற மீன்கள் மேலிருந்து விழுந்ததாகவும் தெருவிக்க படுகிறது .
இது பற்றி வானிலலாளர்கள்கருத்து தெரிவிக்கையில் ஏதாவது நதி ஒன்றில் இருந்து பலமான சுழல் காற்று மூலமாக மேல உறிஞ்சி எடுக்கபட்ட மீன்கள் அதிக உயரம சென்றதும் அதிக பாரம் காரணமாக இவ்வாறு கிழே விழ தொடங்கும் என் கூறியிருக்கின்றார்கள் .

இதுபற்றி bbc வெளியிட்ட ஆவன படம் ஒன்று இது எவ்வாறு நடை பெறுகிறது என தெளிவாக எமக்கு விளக்கம் அளிக்கிறது.

Powered by Blogger.