அரசியல் நகைச்சுவைகள்!
"தலைவர் வேட்பு மனு தாக்கல் பண்ணப் போகும்போது தாரை தப்பட்டை வேணாம்னு சொன்னனே கேட்டியா?
என்னாச்சு இப்ப?
பழக்க தோஷத்தில முன்னாடி ஆடிட்டுப் போய் மானத்த வாங்கிட்டாரு!"
"தலைவர் ஓட்டைப் பிரிக்கிறதில கில்லாடி!
பின்னே....! பழைய தொழிலை அவ்வளவு சீக்கிரம் மறந்துடுவாரா என்ன?"
"உங்க தலைவர் திடீர்னு ரெண்டாம் கல்யாணம் பண்றாரே ஏன்?
வாக்காளர்களுக்கு இலவச பிரியாணி போட அவருக்கு வேற வழி தெரியலையாம்"
"இவ்வளவு பிரமாண்டமான கூட்டத்தைப் பார்த்ததும் உனக்கு என்னையா தோணுது?
கவுத்துடுவாங்களோன்னு தோணுது தலைவரே!"
"நாங்கள் ஏன் ஊழல் செய்தோம்?
உங்களுக்கு ஓட்டுப் போட பணம் தர வேண்டும் என்றுதான் ஊழல் செய்தோம்"
நன்றி விகடன்